சிவாஜி கணேசனுக்கு 8 குழந்தைகள் + யாருக்கும் தெரியாத ஒரு குழந்தை.. மொத்தம் 9..!

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நான்கு குழந்தைகள் என்பதும், அவர்கள் ராம்குமார், பிரபு என இரண்டு மகன்கள் மற்றும் சாந்தி, தேன்மொழி என்ற இரண்டு மகள்கள் என்பது தெரிந்ததே. ஆனால் சிவாஜிகணேசனுக்கு அனைவருக்கும் தெரிந்து 8 குழந்தைகள் இருந்தது என்றும், யாருக்கும் தெரியாமல் ஒரு குழந்தை இருந்தது என்றும் மொத்தம் 9 குழந்தைகள் இருந்தது கூறினால் யாராவது நம்ப முடியுமா.  


சிவாஜிகணேசனின் குழந்தைகள் எண்ணிக்கையை பார்க்கும் முன் அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பார்ப்போம்.  அமெரிக்காவில் இரண்டு நகரங்களுக்கு இடையே ஓடும் ஒரு ட்ரக் டிரைவருக்கு இரண்டு நகரங்களிலும் என இரண்டு மனைவிகள் இருந்தார்கள். இருவருமே சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால்  முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவி பற்றியும், இரண்டாவது மனைவிக்கு முதல் மனைவி பற்றியும் தெரியாது. இரு மனைவிகளிடமும் அவர் பெரும் பாசத்தை கொட்டினார் என்பதும், இருவரையும் சமமாக மதித்து வாழ்க்கை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் திடீரென அந்த நபர் இறந்து போக, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இரு மனைவிகளும் சட்டபூர்வமாக தங்களது வாரிசு என கோரிக்கை விடுத்தனர். காப்பீட்டு நிறுவனம் இருவரது ஆவணங்களையும் பார்த்து ஆச்சரியமடைந்தது. இருவருமே சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டிருந்தனர்.  இதுகுறித்து வழக்கு பல ஆண்டுகளாக நடந்த நிலையில் காப்பீட்டு நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் இருவருக்குமே காப்பீட்டு பணம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்மை சம்பவம் அமெரிக்காவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஹாலிவுட்டில் தி ரிமார்க்கபிள் மிஸ்டர் பென்னிபேக்கர் என்ற நாடகம் நடத்தப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிஃப்டன் வெப்பைக் என்பவர் நடித்த திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் கூட இந்த படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. 


இந்த நிலையில் தான் இந்த படத்தை தழுவி தமிழ் திரைப்படம் ஒன்றை எடுக்க ஜெமினி எஸ்எஸ் வாசன் முடிவு செய்தார். எஸ்எஸ் வாசனின் நெருங்கிய நண்பரான வேப்பத்தூர் கிட்டு என்பவர் ஹாலிவுட் திரைப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றினார்.  இரண்டு வெவ்வேறு பெண்கள் என்பதை இரண்டு பேரும் சகோதரிகள் என்றும், ஒருவர் இறந்துவிட்டதாக கருதி இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கதை மாற்றப்பட்டது. இந்த கதையை நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் எஸ்எஸ் வாசன் கூறிய போது முதலில் இந்த படத்தில் சிவாஜிகணேசன் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது 


அதன் பிறகு பாலிவுட் நடிகர் அசோக்குமார் நாயகனாக வைத்து ஹிந்தியில் இந்த படம் உருவாக்கப்பட்டது. ஹிந்தியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை பார்த்த சிவாஜிகணேசன், எஸ்எஸ் வாசன் அவர்களிடமே சென்று நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். மோட்டார் சுந்தரம்பிள்ளை என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தில் அவருக்கு வயதான வேடம் என்பதும் எட்டு குழந்தைகளுக்கு தந்தை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த எட்டு குழந்தைகளில் ஒருவர்தான் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி உடன் பல படங்களில் ஜோடியாக நடித்த ஜெயலலிதா இந்த ஒரு படத்தில் மட்டும் அவருக்கு மகளாக  நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  குழந்தை நட்சத்திரமாக நடித்த குட்டிபத்மினியும் சிவாஜியின் ஒரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 


செளகார் ஜானகி மனைவியாகவும் 8 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த சிவாஜிகணேசன் வீட்டில் திடீரென ஒரு இளம் வயது வாலிபர் வருவார். அவர் நான் தான் சிவாஜி கணேசனின் மகன் என்று கூறும்போது  வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைவார்கள். அப்போதுதான் உண்மை தெரியும். செளகார் ஜானகி மற்றும் மணிமாலா ஆகிய இருவரும் சகோதரிகள். முதலில் சவுகார் ஜானகியை திருமணம் செய்த சிவாஜிகணேசன், ஒரு விபத்தில் செளகார் ஜானகி இறந்துவிட்டதாக கூறப்படும். அதை உண்மை என நம்பி சிவாஜிகணேசன் சவுகார் தங்கை மணிமாலாவை திருமணம் செய்து கொள்வார். திருமணத்திற்கு பின்னர்தான் திடீரென செளகார் ஜானகி உயிரோடு இருப்பதாக தகவல் வரும். அப்போது சவுகார், மணிமாலாவின் அப்பா, மணிமாலாவை திருமணம் செய்ததை செளகார் ஜானகியிடம் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிவிடுவார். இந்த நிலையில் தான் செளகார்ஜானகிக்கு 8 குழந்தைகளும், மணிமாலாவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கும். மணிமாலாவின் மரணத்திற்கு பின் அந்த ஒரு குழந்தை தான் சிவாஜியின் வீட்டுக்கு வருகை தரும்போது இந்த உண்மை தெரியும். அதன்பின்னர் செளகார் ஜானகியை சிவாஜி எப்படி சமாதானம் செய்தார் என்பது தான் கிளைமாக்ஸ்.


இந்த படம் கடந்த 1966 ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது. சிவாஜிகணேசன், ரவிச்சந்திரன், சிவகுமார், நாகையா, மேஜர் சுந்தரராஜன்,  சௌகார் ஜானகி, ஜெயலலிதா, பண்டரிபாய், காஞ்சனா, மணிமாலா  உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் ஆறு பாடல்கள் இடம் பெற்றிருந்தன என்பதும்,  ஆறு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக  மனமே முருகனின் என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது


இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் எழுதியதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. செளகார் ஜானகியுடன் எட்டு குழந்தைகள், மணிமாலாவுடன் யாருக்கும் தெரியாத ஒரு குழந்தை என மொத்தம் ஒன்பது குழந்தைக்கு தந்தையாக சிவாஜி கணேசன் மிக அற்புதமாக நடித்திருப்பார் என்பதும் அவரது நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிகணேசன் அதிக குழந்தைகளுக்கு தந்தையாக நடித்த ஒரே படம் இந்த படமாக தான் இருக்கக்கூடும். சிவாஜி கணேசனுக்கு நிஜ வாழ்வில் நான்கு குழந்தைகள் மட்டுமே இருந்தாலும், அவர் நடித்த மோட்டார் சுந்தரம்பிள்ளை கேரக்டருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இன்றும் தொலைக்காட்சியில் பார்த்தால் சிவாஜிகணேசன் நடிப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைவார்கள். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பும்  செளகார் ஜானகி நடிப்பும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Contact Form