எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களில் ஒன்றான தேர்த்திருவிழா என்ற திரைப்படம் வெறும் 18 நாட்களில் படமாக்கப்பட்டது என்ற ஆச்சரிய தகவலுடன் இந்த படம் குறித்த மற்ற தகவல்களை பார்ப்போம்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும், அவர்கள் இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் கதை என்னவென்றால் எம்ஜிஆர் தனது அம்மா மற்றும் சகோதரி விஜயகுமாரி ஆகியோர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார். அந்த ஊரில் பரிசல் ஓட்டும் நபராக அவர் இருந்து வரும் நிலையில், தங்கைக்கு ஒரு நல்ல வரன் வரும். இதனை அடுத்து தங்கையின் திருமணத்திற்கு பணம் சேர்ப்பதற்காக அவர் பக்கத்து ஊரில் பரிசல் ஓட்டுவதற்காக செல்வார்.
இந்த நிலையில் தான் எம்ஜிஆரின் கிராமத்திற்கு ஒரு படக்குழுவினர் படப்பிடிப்பிற்காக வருவார்கள். இயக்குனர் முத்துராமன் மற்றும் படக்குழுவினர் அந்த ஊரில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும்போதுதான் விஜயகுமாரி உடன் முத்துராமனுக்கு காதல் ஏற்படும். இந்த நிலையில் இருவருக்கும் நெருக்கமும் ஏற்பட்டு விடும். இந்த நிலையில் விஜயகுமாரி கர்ப்பமாக இருப்பதை அறிந்தவுடன் முத்துராமன் அதிர்ச்சி அடைவார். இதனை அடுத்து அவர் சென்னை சென்று தனது பெற்றோரை அழைத்து வந்து திருமணம் செய்வதாக விஜயகுமாரியிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு சென்னை செல்வார்.
விஜயகுமாரி கர்ப்பமாக இருப்பதை அவரது அம்மா அறிந்து அதிர்ச்சி அடைந்து எம்ஜிஆருக்கு தகவல் கொடுப்பார். இந்த நிலையில் தனது காதலரை கண்டுபிடிக்க சென்னை செல்வதாகவும், அவரை கண்டுபிடித்தால் அவருடன் வருவேன், இல்லை என்றால் உயிருடன் வரமாட்டேன் என்றும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஜயகுமாரி சென்னை சென்று விடுவார்.
எம்ஜிஆர் வீட்டுக்கு வந்து அம்மா மூலம் நடந்ததை அறிந்த நிலையில் அவரும் தங்கையை தேடி சென்னைக்கு செல்வார். சென்னையில் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும் போது ரிக்சா ஓட்டும் வேலையை பார்ப்பார். அப்போதுதான் ஜெயலலிதா அவருக்கு அறிமுகமாவார். இருவருக்கும் இடையே காதல் ஏற்படும். ஒரு பக்கம் தங்கையையும் அவரை ஏமாற்றிய முத்துராமனையும் தேடும் எம்ஜிஆர், இன்னொரு பக்கம் ஜெயலலிதாவுடன் டூயட் பாடி கொண்டு இருப்பார்.
இந்த நிலையில் தான் காவல்துறை அதிகாரி ஒருவர் எம்ஜிஆருக்கு அறிமுகமாக, அதனை அடுத்து அவரது அறிவுரையின் பேரில், எம்ஜிஆர் காவல்துறையில் சேருவார். இந்த நிலையில் தான் விஜயகுமாரிக்கு குழந்தை பிறக்க, குழந்தையுடன் கூடிய தங்கையை எம்ஜிஆர் கண்டுபிடிப்பார். அவரிடமிருந்து சில விவரங்களை பெற்று இயக்குனர் முத்துராமனை கண்டுபிடிப்பதற்காக பல ஸ்டூடியோவில் ஏறி இறங்குவார். அப்போது தான் திடீரென அவருக்கு நடிகராகும் வாய்ப்பு கிடைக்கும். அதுவும் முத்துராமன் இயக்கத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
முத்துராமன் தான் தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்தவர் என்று தெரியாமல் எம்ஜிஆர் அவருடைய இயக்கத்தில் நடிப்பார். அதே படத்தில் ஜெயலலிதாவும் நடிப்பார். இந்த நிலையில் தான் எம்ஜிஆர் மீது சில கருத்து வேறுபாடு காரணமாக அவரை கொலை செய்ய முத்துராமன் முயற்சி செய்வார். அப்போது படப்பிடிப்பை பார்ப்பதற்காக விஜயகுமாரி வரும்போது, முத்துராமன் தான் தனது காதலர் என்பதை எம்ஜிஆரிடம் சொல்வார். தனது தங்கையை காதலித்து ஏமாற்றியது முத்துராமன் என்பதை அறிந்தபின்னர் அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
இந்த படத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் ஒரு நாடகத்தை பார்ப்பதற்காக வந்திருப்பார்கள். அந்த நாடகத்தின் தலைமை ஏற்ப்பவராக நடிகராக எம்ஜிஆர் வந்திருப்பார். எம்ஜிஆர், மக்கள் திலகம் எம்ஜிஆராகவே நடித்த ஒரு படம் தேர்த்திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் படகோட்டி, ரிக்சாக்காரன், காவல்துறை அதிகாரி, நடிகர் என 4 கெட்டப்களில் எம்ஜிஆர் நடித்திருப்பார். இந்த படத்தில் கேவி மகாதேவன் நான்கு பாடல்களை கம்போஸ் செய்திருப்பார் என்பதும் நான்கு பாடல்களும் நல்ல ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் செட் போட்டு படமாக்கப்பட்டதால் இயக்குனர் எம்ஏ திருமுகம் 18 நாட்களில் இந்த படத்தை இயக்கி முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடித்த இன்னொரு வெற்றி படமாக அமைந்தது என்பதும் இந்த படம் நல்ல வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது