'வசந்த மாளிகை’ படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் ஜெயலலிதாவா? வாணிஸ்ரீ எப்படி வந்தார்?





 நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வசந்தமாளிகை திரைப்படம் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தில் சிவாஜிகணேசன் ஜோடியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த படம் வெளியான காலத்தில் ஆனந்த் மற்றும் லதா கேரக்டர்கள் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது என்பதும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு லதா மற்றும் ஆனந்த் என்று பெயர் வைத்ததாகவும் கூறப்பட்டது.

 இந்த படத்தை கேஸ் பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார் என்பதும்  விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் தயாரிப்பில் கேவி மகாதேவன் இசையில் இந்த படம் உருவானது. இந்த படத்தில் 8 பாடல்கள் இருந்தன. ஓ மானிட ஜாதி, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன், குடிமகனே பெரும் குடிமகனே,கலைமகள் கைபொருளே, அடியம்மா ராஜாத்தி, மயக்கம் என்ன, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக இது யாருக்காக ஆகிய அனைத்து பாடல்களும் பிரபலமானது.  

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்  அந்த காலத்திலேயே கோடிக்கணக்கில் இந்த படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் இந்த படத்தில் சிவாஜிகணேசன் ஜோடியாக ஜெயலலிதா தான் முதலில் ஒப்பந்தமானார். படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் தாயார் சந்தியா திடீரென மரணமடைந்தார். இதனால் ஜெயலலிதா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. 

ஜெயலலிதாவுக்காக படக்குழுவினர் காத்திருக்கவும் முடிவு செய்தனர். ஆனால் அம்மாவின் மறைவு தனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும், அதனால் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று ஜெயலலிதா சொன்னதை அடுத்து தான்,  அதன் பிறகு வாணிஸ்ரீ இந்த படத்திற்குள் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


வாணிஸ்ரீ சிறப்பாக இந்த படத்தில் நடித்திருப்பார் என்றாலும், ஜெயலலிதா இந்த படத்தில் நடித்திருந்தால் இன்னும் மிகப்பெரிய அளவு பாசிட்டிவாக அமைந்திருக்கும் என்றுதான் கூறப்படும்.  

இந்த படத்தின் கிளைமாக்ஸ் சிவாஜிகணேசன் இறந்து விடுவது போல் தான் முதலில் படமாக்கப்பட்டது. ஆனால், சிவாஜி கணேசன் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், படம் வெளியான ஒரே நாளில் அவசர அவசரமாக கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு, சிவாஜி மீண்டும்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி விடுவதாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த படம் இலங்கையில் வெளியான போது சிவாஜிகணேசன் இறந்து விடுவது போல் தான் கிளைமாக்ஸ் இருக்கும் என்பதும் அங்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜமீன்தாரின் மகனான சிவாஜி கணேசன், சிறுவயதில் தன்னை வளர்த்த ஆயாவை தனது அம்மா சுட்டு கொன்று விடுவார் என்பதால், அம்மா மீதும், அண்ணன் மீதும் அவர் பாசம் இல்லாது இருப்பார். இதனால் அவர் மது, மாது என சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் தான் வாணிஸ்ரீயை பார்ப்பார். அவர் மீது காதல் கொள்வார், இந்த நிலையில் சிவாஜியின் காதலை வாணிஸ்ரீயும் ஏற்று கொள்வார். 


இந்த நிலையில் சிவாஜி, வாணிஸ்ரீயை பிரிக்க சிவாஜியின் ஒரு சதி செய்வார், அதனால் இருவரும் பிரிந்து விடுவார்கள். அதன் பின்னர்  பலவிதமான சம்பவங்களுக்கு பிறகு, மீண்டும் இருவரும் இணைந்தார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை.  

சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த 10 படங்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால், அதில் நிச்சயம் வசந்தமாளிகை இடம் பெறும். அந்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது என்பதும், திரும்பத் திரும்ப ரசிகர்கள் இந்த படத்தை பலமுறை பார்த்து கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post

Contact Form