சிவாஜிகணேசனுக்கு மாமியாரான வைஜெயந்திமாலாவின் அம்மா..! எப்படி தெரியுமா?

 


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மாமியார்தான் வைஜெயந்திமாலாவின் அம்மா வசுந்தராதேவி என்றால் நம்ப முடியுமா, ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். அதுதான் உண்மை.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றாலே நடிப்பு மேதை என்றுதான் கூற வேண்டும். அவர் நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட்  வெற்றி பெற்றுள்ளது என்பதும் அவரது நடிப்பிற்கு ஈடு இணை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல படங்கள் உதாரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக ஜெமினி எஸ்எஸ் வாசன் தயாரித்து இயக்கிய இரும்புத்திரை என்ற திரைப்படம் சிவாஜிகணேசன் நடிப்புக்கு முத்திரை பதிக்கும் அளவுக்கு இருந்த ஒரு படம் என்பதும்,  மில் தொழிலாளியாக இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடித்த நிலையில்  அவரது நடிப்பு, ஆழ்ந்த வசனங்கள், புரட்சிகரமான கருத்துக்கள், முதலாளி தொழிலாளி இடையே நடக்கும்  வாக்குவாதங்கள் மற்றும் பிரச்சனைகள், அதை  தீர்க்கும் முறைகள், இடையே ஒரு மெல்லிய காதல், இன்னொரு ஒருதலை காதல், காதல் கைகூடாததால் ஏற்படும் பொறாமை, அதனால் ஏற்படும் விபரீதம் என இந்த படம் ஒரு புரட்சிகரமான மற்றும் ஜனரஞ்சகமான படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


 சிவாஜிகணேசன் மற்றும் வைஜயந்திமாலா இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி வெளியான உடனே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படத்தில் சிவாஜிகணேசன், உழைப்பை நம்பி வாழும் ஒரு இளைஞராக நடித்திருப்பார். ரிக்ஷா ஓட்டிக்கொண்டு இருக்கும் அவர், அந்த ஊதியத்தை வைத்து தனது அண்ணன், அண்ணி உடன் வாழ்ந்து வருவார். இந்த நிலையில் தான் அவரது அண்ணன் வேலை பார்க்கும் பஞ்சு ஆலையில் மெக்கானிக் வேலை கிடைக்கும். முதலாளியின் நன் மதிப்பை பெறுவதற்கு அவசியமில்லாமல் தன்னுடைய கடமையை மட்டும் செய்து கொண்டிருப்பார் சிவாஜிகணேசன்.


அப்போது அந்த ஆலையில் உள்ள ஒரு முக்கிய மிஷின் ரிப்பேர் ஆகிவிடும், உடனே அப்போது தலைமை மெக்கானிக்காக இருந்த  ஒருவர், இந்த மிஷனை ரிப்பேர் பார்க்க வெளிநாட்டிலிருந்து தான் மெக்கானிக் வரவேண்டும் என்று கூறுவார். அப்போது சிவாஜி, ஏன் எல்லாவற்றிற்கும் வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டும், நம் நாட்டிலேயே நல்ல மெக்கானிக்குகள் இருக்கின்றார்கள் என்று கூறுவார். உடனே உன்னால் முடியுமா என்று முதலாளி கேட்பார். கண்டிப்பாக முடியும் என்று கூறி, அந்த மிஷினை ரிப்பேர் செய்து ஓட வைப்பார். எல்லோரும் அவரை பாராட்டுவார்கள். அதன் பிறகு அவர் முதலாளியின் நன்மதிப்பை பெறுவார்.


இந்த நிலையில் தான் வைஜெயந்திமாலாவை சிவாஜி தற்செயலாக பார்ப்பார். அந்த பார்வை ஒரு கட்டத்தில் நட்பு மற்றும் காதலாக மாறி, இருவரும் ஒருவரை ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள், காதலை பரிமாறிக் கொள்வார்கள். இந்த நிலையில் தான் மில் ஆலையின் உரிமையாளர் ரங்காராவின் மகள் சரோஜாதேவியும்  சிவாஜியை ஒருதலையாக காதலிப்பார். ஆனால் தன்னுடைய முழு காதலும் வைஜெயந்திமாலாவுக்கு என்று முடிவு செய்த சிவாஜி, சரோஜாதேவியின் காதலை புறக்கணித்து விடுவார். அதனால் வைஜெயந்திமாலா மீது பொறாமைப்படும் சரோஜாதேவி செய்யும் ஒரு விபரீத செயல் சிவாஜி கணேசனை சிறைக்கு செல்லும் வகையில் தள்ளிவிடும்.  இதனை அடுத்து வைஜெயந்திமாலாவின் அம்மாவான வசுந்தராதேவி பின்னணி என்ன என்பது தெரிய வரும் போது பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்படும்.  சிவாஜிகணேசன் வைஜெயந்திமாலாவை திருமணம் செய்து கொண்டாரா,   மில் முதலாளி எஸ்வி ரங்காராவ் எடுக்கும் அதிரடி முடிவு என்ன, எஸ்வி ரங்காராவுக்கும் வைஜெயந்திமாலாவுக்கும் உள்ள உறவு முறை என்ன, என்பது போன்ற பல மர்மம் முடிச்சுகளுக்கு ஒவ்வொன்றாக விடை கிடைக்கும் போது பார்வையாளர்கள் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே செல்வார்கள். 


இந்த படத்தை இயக்கிய எஸ்எஸ் வாசன் ஒவ்வொரு  ஆச்சரியத்தையும் தனது திரைக்கதை மூலம் அபாரமாக வெளிப்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடப்பட்டது.  மாணிக்கம் என்ற ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியாக ஆரம்பத்தில் அறிமுகமாகும் சிவாஜிகணேசன், அதன் பின்னர் ஆலைக்கு சென்ற பின்னர் அவருடைய அழுத்தம் திருத்தமான பேச்சு,  நடிகர் திலகம் நடிப்பிற்கு திலகம் வைத்தால் போல் இருக்கும். மிஷினை ரிப்பேர் செய்ததால் முதலாளியின் நன்மதிப்பை பெற்றாலும், முதலாளி, தொழிலாளிகளுக்கு செய்யும் துரோகத்தை கண்டு பொங்கி எழுவது, முதலாளிக்கு எதிராக யூனியன் அமைத்து போராடுவது, தொழிலாளர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது என சிவாஜியின் பண்பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம்.


 ஏழை பெண்ணாக வரும் ஜெயந்தி என்ற கேரக்டரில் வைஜெயந்திமாலா நடித்திருப்பார். முதலில் சிவாஜியை கண்டு மனம் கரைந்து காதலாகி கசிந்து உருகுவது, அதன் பிறகு அன்னைக்கு துரோகம் செய்தவரை பழிவாங்க துடிப்பது என வைஜெயந்திமாலாவின் நடிப்பில் உயிரோட்டம் இருக்கும்.  காதல் காட்சிகளை மட்டும் இல்லாமல், உருக வைக்கும் கண்ணீர் காட்சிகளும் அவருக்கு உண்டு என்பதும், அதையும் அவர் சிறப்பாக செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 


சரோஜாதேவிக்கு மில் முதலாளியின் மகள் கேரக்டர். ஒரு பணக்கார பெண்ணிற்கு உரிய திமிர், அலட்டல் மற்றும் சிவாஜியை கண்டு உருகும் காதல், காதல் தோல்வி அடைந்ததால் ஏற்படும் கோபம், ஆத்திரம், பழிவாங்கல் ஆகியவற்றை மிக அழகாக தனது நடிப்பின் மூலம் சரோஜாதேவி வெளிப்படுத்தி இருப்பார். 


இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டர் என்றால் அது எஸ்வி சுப்பையா. சிவாஜி கணேசன் அண்ணனாக வரும் இவர், தன்னுடைய முதலாளியிடம் தம்பியை அறிமுகப்படுத்தி வேலைக்கு சேர்ப்பது, ஒரு  பாசம் மிகுந்த அண்ணனாகவும் அதே நேரத்தில் முதலாளிக்கு விசுவாசமுள்ள ஒரு தொழிலாளியாகவும் இருப்பது, ஒரு கட்டத்தில் முதலாளிக்கும் தம்பிக்கும் மோதல் போக்கு வரும்போது அவர் முதலாளியின் பக்கம் தான் இருப்பது, தம்பியை கண்டிப்பது என சிறப்பாக நடித்திருப்பார். எஸ்வி சுப்பையாவின் மனைவியாகவும் சிவாஜியின் அண்ணியாகவும் அமைதியான தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பண்டரிபாய். 

இவ்வளவு அழுத்தமான கேரக்டர்கள் இருக்கும் இடத்தில் ஒரு காமெடி கேரக்டர் வேண்டும் அல்லவா, அந்த இடத்தை பூர்த்தி செய்யும் தங்கவேலு அவர்களுக்கு இந்த படத்தில் மிகச்சிறந்த காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் இசை மட்டும் சிறப்பாக இல்லாமல் இருக்குமா?. இந்த படத்திற்கு எஸ்வி வெங்கட்ராமன் இசையமைத்து இருப்பார் என்பதும், மிகப் பொருத்தமான பாடல்களை இந்த படத்தில் அவர் கம்போஸ் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


குறிப்பாக நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நான் இருக்கும் என்ற டிஎம் சௌந்தரராஜன் லீலா பாடிய பாடல் இன்றும் என்றும் கேட்பதற்கு பிரமாதமாக இருக்கும். அதேபோல் தங்கவேலு பாடுவதாக இருக்கும் டப்பா டப்பா என்ற பாடல்,  கையில வாங்கினேன் பையில போடல என்ற பாடல், ஏரை பிடித்தவனும் இங்கிலீஷ் படித்தவனும் என்ற பாடல் என அனைத்து பாடல்களும் தேனினும் இனிய வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த படம் கடந்த 1960 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆனது. சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, சரோஜாதேவி, எஸ்வி ரங்காராவ்,  எஸ்வி சுப்பையா ஆகியோர்களின் போட்டி போட்ட நடிப்பின் காரணமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தமிழில் உருவான இந்த படம் அதே நேரத்தில் ஹிந்தியில் உருவானது என்பதும், அப்போது வைஜெயந்திமாலா பாலிவுட்டில் பிரபலம் என்பதால் இந்த படம் ஹிந்தியில் வசூலில் சக்கைபோடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த படத்தில் வைஜெயந்திமாலாவின் அம்மாவாக  வசுந்தராதேவி நடித்திருந்தார் என்பதும் அவர் வைஜெயந்திமாலாவின் உண்மையான அம்மா என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையான அம்மா மகள், இந்த படத்திலும் அம்மா மகளாக நடித்திருக்கும் போது நடிப்பிற்கு கேட்க வேண்டும். மிக அபாரமாக இருவரது நடிப்பும் இருக்கும். வசுந்தராதேவி, சிவாஜிக்கு மாமியாராக நடித்த ஒரே படம் இந்த படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்திற்கு பின்னர் வைஜயந்தி மாலாவின் அம்மா வசுந்தரா தேவி வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இந்த படம் சிவாஜி ரசிகர்களுக்கு என்றும் மனதில் இருக்கும் வகையில் ஒரு அற்புதமான படமாக அமைந்தது என்பதும், இந்த படத்தை இன்று பார்த்தால் கூட முதலாளி தொழிலாளி இடையே பேசும் வசனங்கள் அட்டகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


 இந்த படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் இடம் பெற்று இருந்தன என்பதும் அவற்றில்  ஐந்து பாடல்களை  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களும் நான்கு பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு அவர்களும் ஒரு பாடலை பாபநாசம் சிவன் அவர்களும் எழுதி இருந்தனர் 


இந்த படத்தில் பாடல்கள் எழுதிய கொத்தமங்கலம் சுப்பு தான், சிவாஜி கணேசன் நடித்த தில்லா மோகனாம்பாள் நாவலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படத்திற்கு விகடன், கல்கி உள்பட அனைத்து ஊடகங்களும் மிகச்சிறந்த விமர்சனத்தை கொடுத்தது என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இந்த படம் ஒரே திரையரங்கில் 175 நாட்கள் ஓடி சில்வர் ஜூப்ளி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Contact Form