எம்ஜிஆர் மனைவிக்கு தாலி கட்டியது யார்? அறிஞர் அண்ணா செய்த மாயஜாலம்..!


மக்கள் திலகம் எம்ஜிஆர், தனது திருமணத்தின் போது, தனது மனைவிக்கு தாலி கட்டவில்லை என்றும் அதுதான் பேரறிஞர் அண்ணா செய்த மாயாஜாலம் என்றும் கூறப்படுகிறது.  எம்ஜிஆரின் திருமணம் மற்றும் அவர் தனது மனைவிக்கு தாலி கட்டாதது குறித்து பார்ப்பதற்கு முன் அறிஞர் அண்ணா செய்த மாயாஜாலம் என்ன என்பதை பார்ப்போம் 


அறிஞர் அண்ணா ஒரு சிறந்த அரசியல்வாதி மட்டுமின்றி, ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் கதாசிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எழுதிய ஒரு சில நாவல்கள் மற்றும் சிறுகதைகள் திரைப்படமாகவும் வெளியாகி உள்ளது. அவ்வாறு வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் தாய் மகளுக்கு கட்டிய தாலி. 


ராஜா ராணி கதைகள் வந்து கொண்டிருந்த  காலகட்டத்தில் மிகவும் தைரியமாக ஜாதி பிரச்சனையை மையமாக வைத்து, ஒரு சமூக படமாக உருவாக்கப்பட்டது தான் தாய் மகளுக்கு கட்டிய தாலி. அண்ணா எழுதிய கதையான தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற கதையை அதே பெயரை 1959 இல் திரைப்படமான நிலையில் இந்த படத்திற்கு ராம அரங்கண்ணல் திரைக்கதை எழுதினார். 


இந்த படத்தின் கதை என்னவென்றால் சுந்தரம் என்ற ஜமீன்தார்  ஒரு ஊரில் கொடுங்கோலனாக இருந்தார். அவருக்கு யாராவது சொத்து வைத்திருந்தால் பிடிக்காது, உடனடியாக அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும் போது கடன் கொடுத்து, அந்த சொத்தை எழுதி வாங்கிக்கொள்வார். அவ்வாறு ஊரில் உள்ள எல்லோருடைய சொத்தையும் கடன் கொடுத்து, எழுதி வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தான் சகாதேவன் என்பவருடைய சொத்தையும் எழுதி வாங்கினார். 


அதனை அடுத்து  அவர் இறந்துவிட்டதாக எல்லோரும் கூறப்பட்ட நிலையில், தன்னுடைய கடனை கொடுக்காமல் ஊரை விட்டு ஓடி விட்டதாக சுந்தரம் கதை கட்டி விடுகிறார். இதனை அடுத்து சகாதேவியின் மனைவி தனபாக்கியம் தனது மகள் சுந்தரியுடன் வேறு கிராமத்துக்கு சென்று பிழைப்பு நடத்தி வருவார். அந்த ஊரில் ஒரு பணக்கார வாலிபர் இருந்தார். அவர் பெயர்தான் கனகு. அவருக்கு சுந்தரி மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் இருவரும் வேறு வேறு ஜாதி என்பதால் அவர்களது காதலை ஊரும் ஒத்துக்கொள்ளவில்லை, கனகுவின் பெற்றோரும் ஒத்துக்கொள்ளவில்லை, ஆனாலும் சுந்தரியை கனகு யாருக்கும் தெரியாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்கிறார். 


இந்த நிலையில் திடீரென ஒரு தீ விபத்து நடந்த நிலையில் சுந்தரி, தாயுடன் இறந்து விட்டதாக கருதப்படுகிறது. தனது மனைவி இறந்து விட்டதாக கனகுவும் நம்புகிறார். இதெல்லாம் சுந்தரத்தின் சூழ்ச்சி என்பது தெரியாமல் இருக்கும் நிலையில், கனகுவின்  தந்தையும் சுந்தரத்திடம் எதிர்பாராத வகையில் கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார். சுந்தரம், அவருக்கு ஏராளமான கடன் கொடுத்து அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கும்போது தான், தனது மகள் காவிரியை கனகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கிறார். ஏற்கனவே தனது மனைவி சுந்தரி இறந்து விட்டதாக நம்பும் கனகு, வேறு வழியில்லாமல் அப்பாவை காப்பாற்றுவதற்காக காவிரியை திருமணம் செய்து கொள்கிறார் 


இந்த நிலையில் தான் தீ விபத்தில் இருந்து தப்பி, சுந்தரியும் அவருடைய தாயாரும்  உயிரோடு இருக்கிறார்கள் என்பது கனகுவிற்கு தெரிய வருகிறது. மேலும் சுந்தரிக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறார் கனகு. இதனை அடுத்து இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் இரண்டாவது மனைவி காவிரி தன்னுடைய உயிரை மாயத்து கொள்கிறார். இதை அடுத்து சுந்தரத்திற்கு தகுந்த பாடம் கற்பித்து சுந்தரியுடன் கனகு இணைக்கிறார். 


இந்த படத்தில் கனகு மற்றும் சுந்தரி ஆகிய இருவரும் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளாமல்  ரிஜிஸ்டர் திருமணம் செய்து இருப்பார்கள். ஆனால் சுந்தரியை நீண்ட வருடங்கள் கழித்து கனகு பார்க்கும் போது அவரது கழுத்தில் தாலி இருக்கும். இந்த தாலி உனக்கு எப்படி வந்தது என கனகு கேட்க, தன்னுடைய தாயார் தான் கட்டிவிட்டார் என்று சொல்வார். தான் ஒரு குழந்தைக்கு தாயானதால் ஊர் மக்கள்,  நான் நடத்தை கெட்டவர் என்று சொல்வார்கள் என்று தனது தாயாரே தனக்கு மஞ்சள் கயிறு கட்டிவிட்டார் என்று கனகுவிடம் கூறுவார், கனகுவும் அதை ஏற்று கொள்வார். இதனை அடுத்து தான் தாய் மகளுக்கு கட்டிய தாலி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு கதை முடிந்திருக்கும். மொத்தத்தில் இந்த படத்தில் கனகுவின் மனைவிக்கு கனகு தாலி கட்டியிருக்க மாட்டார். அந்த கனகுவின் கேரக்டரில் தான் எம்ஜிஆர் நடித்திருப்பார் என்பதும், அறிஞர் அண்ணா இதில் தான் தனது எழுத்தில் மாயாஜாலம் செய்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


டிஆர் பாப்பா இசையில் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன் ஆகியோர்களின் பாடல் வரிகளில் இந்த படத்தில் மொத்தம் பதினொறு பாடல்கள் இடம் பெற்றன. அனைத்து பாடல்களுமே தேனிலும் இனியவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணாவின் கதை, ராம அரங்கண்ணல் திரைக்கதை, ஆர்ஆர் சந்திரனின் இயக்கம், டிஆர் பாப்பாவின் இசை ஆகிவை சேர்ந்து இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படம் ஆக்கியது. 


இந்த படத்தில் கனகு கேரக்டரில் எம்ஜிஆர் நடித்திருந்தார் என்பதும், சுந்தரி கேரக்டரில் ஜமுனா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வில்லன் சுந்தர முதலியார் கேரக்டரில் எம்ஜிஆர் சகோதரர் எம்ஜி சக்கரபாணி நடித்திருந்தார். சுந்தரியின் தாயாராக கண்ணாம்பாள் நடித்திருந்தார். 


இந்த படம் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. மிகச்சிறந்த சமூக கதையம்சம் கொண்ட படமாகவும் சாதி வேற்றுமையை  60 ஆண்டுகளுக்கு முன்பே கன்னத்தில் அறையும் வகையில் கூறப்பட்டிருந்த படம் எனவும், புரட்சிகரமான படம் என அன்றைய ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடின. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் எம்ஜிஆர் பல சமூக படங்களில் தைரியமாக நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Contact Form