விஜயகாந்த் அவர்களுக்கும், ரஜினிகாந்த் அவர்களுக்கும் பெரிய அளவில் நட்பு இருந்தது இல்லை என்றும், இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான, மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில், சுகாசினியுடன் இருவரும் தனித்தனியாக ஒரு பாடலில் டான்ஸ் ஆடி இருப்பார்கள். அதை தவிர இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு சில படத்தில் கிடைத்த போது கூட, அதில் அவர்கள் நடிக்கவில்லை.
குறிப்பாக முரட்டுக்காளை திரைப்படத்தில் வில்லனாக நடிக்க விஜயகாந்த் அவர்களுக்கு வாய்ப்பு வந்தபோது, அதை அவர் மறுத்துவிட்டார். வில்லனாக நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதை அடுத்து தான், அந்த படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். அந்த வகையில் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் இடையே பெரிய அளவில் நட்பு இல்லாத நிலையில், விஜயகாந்த் படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடித்தார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான ஒரு தகவலாகும். அந்த படம் தான் சட்டம் ஒரு இருட்டறை.
கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் கதையை சோபா சந்திரசேகர் எழுத, அவருடைய கணவர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடிக்க, இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் தான் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பதும், அதுதான் அந்தா கானூன்’ என்ற படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அப்போதுதான் எஸ்ஏ சந்திரசேகர் சொன்ன கதை பிடித்து விட்டதை அடுத்து, அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். சட்டம் ஒரு இருட்டறை என்ற இந்த படம் தான் விஜயகாந்த் நடித்த முதல் வெற்றி படம் என்பதும், முதன்முதலாக 100 நாட்கள் ஓடிய விஜயகாந்த் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதையை என்னவெனில், சிறுவயதில் தான் நேரில் பார்த்த மூன்று கொலைகளை காவல் நிலையத்தில் விஜயகாந்த் கூறுவார். ஆனால் அந்த மூன்று பேரும் சிறையில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் கொலையாளிகள் அல்ல என்றும், போலீசார் அந்த வழக்கை எடுக்க மாட்டார்கள். இதனை அடுத்து வளர்ந்து பெரியவனான விஜயகாந்த், அந்த மூவரையும் பழிவாங்க வேண்டும் என்று துடிப்பார். ஆனால் விஜயகாந்தின் அக்கா, காவல்துறை அதிகாரியாக இருப்பார். அந்த மூன்று கொலைகாரர்களையும் நான் ஆதாரத்துடன் சட்டத்தின் முன் நிறுத்துகிறேன், நீ சட்டத்தை உன் கையில் எடுத்துக்கொண்டு அவர்களை ஒன்றும் செய்து விடாதே என்று கூறுவார். இருவருக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் முதல்முதலாக ஆவேசமான வசனம் பேசி, அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்து இருப்பார். இந்த படத்தின் ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும் என்பதும், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் எப்படி தப்பிருக்கிறார்கள் என்பதை எஸ்ஏ சந்திரசேகர் தன் வசனத்தால் தூள் கிளப்பி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் வெற்றியை அடுத்த தான், சாட்சி, வெற்றி என விஜயகாந்த் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் பல படங்களில் இணைந்து பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், ஹீரோவாக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். விஜயகாந்த் வேடத்தில் ரஜினியும், விஜயகாந்த் அக்காவாக நடித்த கேரக்டரில் பாலிவுட்டின் பிரபல நடிகையான ஹேமாமாலினியும் நடித்தனர். இந்த படம் 1983 ஆம் ஆண்டில் இரண்டு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் 5 கோடிக்கு மேல் லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த் தமிழில் ஒரு வித்தியாசமான பாணியில் நடிப்பில் கலக்கி இருப்பார் என்றால், ரஜினிகாந்த் தன்னுடைய ஸ்டைல் பாணியில் அந்தா கானுன் படத்தில் நடித்திருப்பார். இதன் பிறகு அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் வந்தபோதிலும் தமிழில் அவர் அடுத்தடுத்து பிசியானதால் ஹிந்தியில் கவனம் செலுத்தவில்லை. மொத்தத்தில் விஜயகாந்த் நடித்த ’சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் ஹிந்தியில் படமான அந்தாகானூன் படத்தில் நடித்த ரஜினி, பாலிவுட்டில் தான், ஒரு வெற்றி நாயகன் என்பதை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.