மதுரையை மீட்டது போல் தமிழ்நாட்டையும் மீட்டார்.. எம்ஜிஆரின் கடைசி படம் இதுதான்..!







 மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த கடைசி திரைப்படம் தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, அதில் அதிமுக  பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல்வர் பதவியை ஏற்பதை பத்து நாட்கள் தள்ளி வைத்த எம்ஜிஆர், இரவு பகலாக இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முதல்வர் பதவியை ஏற்றார். தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் இந்த படம் வெளியானது என்பதும், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உரிய படமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பிரபல எழுத்தாளர் அகிலன் எழுதிய கயல்விழி என்ற நாவலின் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதை உருவானது. மூன்றாம் ராஜராஜ சோழனிடம் இருந்து, மதுரையை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவர் மீட்ட வரலாறு தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை பி.ஆர் பந்துலு இயக்கிக் கொண்டிருந்தபோதே திடீரென மரணம் அடைந்தார் என்பதால், எம்ஜிஆர் முழு படத்தையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த படத்தின் கிளைமாக்ஸில் ஒரு போர் காட்சி பிரம்மாண்டமாக அந்த காலத்திலேயே எடுக்கப்பட்டிருந்தது. ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்ட இந்த போர்க்காட்சியை படமாக்குவதற்காக, ஒன்பது கேமராக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டது என்பதும், அதன் பிறகு எடிட்டிங்கில் உட்கார்ந்து எந்த காட்சியை நீக்குவது என்றே புரியாத அளவுக்கு எடிட்டர் திணறினார் என்றும் கூறப்படுவது உண்டு.

இந்த படம் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வெளியானது. எம்ஜிஆர் ஜோடியாக லதா நடித்திருக்க, பத்மப்பிரியா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். எம்என் நம்பியார், பிஎஸ் வீரப்பா, எஸ்வி சுப்பையா, விஎஸ் ராகவன், தேங்காய் சீனிவாசன், ஐசரிவேலன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். எம்எஸ் விஸ்வநாதன் இந்த படத்தில் இசையமைத்திருந்தார்.  இந்த படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.  


இந்த படம் பாக்ஸ்ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் இந்த படம் எம்ஜிஆரின் கடைசி படம் என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Contact Form