திமுகவிலிருந்து வெளியேறிய எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியை தொடங்கிய பிறகு, நடித்த படங்களில் எல்லாம் ஆங்காங்கே சில காட்சிகள் தன்னுடைய கட்சியை வளர்க்கும் வகையில் வைத்திருந்தார் என்பதும், ஆனால் அதே நேரத்தில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, முழுமையான ஒரு அரசியல் படமாக எடுக்காமல், ஆங்காங்கே சில காட்சிகளை தனக்கு சாதகமாக தனது அரசியல் பயணத்துக்கு சாதகமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் படத்தின் ஆரம்பத்திலேயே அண்ணா, எம்ஜிஆர் பற்றி கூறிய வசனத்தை வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் இதயக்கனி. கடந்த 1972 ஆம் ஆண்டு, எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கிய நிலையில், 1975 ஆம் ஆண்டு வந்த படம் தான் இதயக்கனி. முதன் முதலாக எம்ஜிஆர் ஜோடியாக ராதா சலூஜா நடித்திருக்க, இந்த படத்தை ஜெகந்நாதன் இயக்கியிருப்பார் என்பதும் திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதைப்படி எம்ஜிஆர் ரகசிய போலீஸ் ஆக இருப்பார், அதே நேரத்தில் எஸ்டேட் ஓனராகவும் இருப்பார். இந்த நிலையில், ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு ஏழை பெண்ணை காப்பாற்றுவார். அவரை தனது வீட்டிலேயே தங்க வைத்திருப்பார். ஆனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் தவறாக பேசியதை அடுத்து அவர் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வார். அதன் பிறகு தான் அந்த பெண் ஒரு கொள்ளை கூட்டத்தைச் சேர்ந்த பெண் என்பது தெரியவரும்.
ரகசிய போலீஸாக வேலை பார்க்கும் எம்ஜிஆர், அந்த தனது மனைவியின் உண்மையான சொரூபம் என்ன என்பதை அவருக்கே தெரியாமல் விசாரணை செய்வார். குறிப்பாக அவரது கைரேகையை அவருக்கே தெரியாமல் எடுப்பது, அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பது என்றபடி இருப்பார்.
ஒரு கட்டத்தில் கொள்ளைக் கூட்டத்தில் இருந்த பெண்ணின் முகச்சாயலில் இருப்பவர் தான் தனது மனைவி என்றும், தனது மனைவிக்கும் கொள்ளை கூட்டத்தில் இருந்த பெண்ணுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்வார். அதன் பிறகு அந்த உண்மையான கொள்ளை கூட்டத்தை பிடிப்பதுதான் எம்ஜிஆர் பணியாக இருந்தது என்றும், அதில் அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதுதான் திரைக்கதையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் ஊடகங்கள் கொண்டாடின என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு எம்எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, இன்பமே உந்தன் பேர் பெண்மையோ, ஒன்றும் அறியாத பெண்ணோ, தொட்ட இடம் எல்லாம், போன்ற பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த படம் பல நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அதிமுகவின் வெற்றிக்கு போடப்பட்ட அச்சாரம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த படத்தின் முதல் பாடல் காட்சியில் எம்ஜிஆரின் புகழைப் பாடும் வரிகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருந்தாலும், அதிமுக தொண்டர்களும், எம்ஜிஆர் ரசிகர்களும் அதை ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆரம்பகாட்சிகளை தவிர, அவர் படத்தின் கதையில் அரசியலை நுழைக்கவில்லை என்பதும் முழுக்க முழுக்க விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஒரு சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு படமாகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.