மக்கள் திலகம் எம்ஜிஆர் கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி, அதாவது கட்சி ஆரம்பித்த மூன்றே நாளில் வெளியான திரைப்படம் தான் இதயவீணை. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், வசூலை வாரி குதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த விகடனில் எழுத்தாளர் மணியன் எழுதிய நாவல் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாவலை படமாக்க மணியன் விரும்பிய போது எம்ஜிஆர் அதற்கு சம்மதித்தார். இதயவீணை என்ற டைட்டில் வைக்கப்பட்டது.
சிறுவயதில் எம்ஜிஆர், தந்தைக்கு அடங்காத பையனாக இருப்பார். அவரது தந்தையாக நடித்தவர் எம்ஜிஆரின் உடன்பிறந்த சகோதரர் எம்ஜி சக்கரபாணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறுவயது பாலில் இதை கலந்து கொடுத்தால் உன் தந்தை உன் சொல்படி கேட்பார் என்று எம்ஜிஆருக்கு தவறாக அறிவுரை கூறுவார்கள். அதை நம்பி அவர் பாலில் கலந்து கொடுக்கும் போது எம்ஜி சக்கரபாணி அதை பார்த்து விடுவார். என்னையே கொலை செய்ய துணிகிறாயா என்று சிறுவயது எம்ஜிஆரை அடித்து விரட்டி விடுவார்
அதன்பின் எம்ஜிஆர் காஷ்மீருக்கு சென்று விடுவார். காஷ்மீரில் வளர்ந்த பின்னர் அவர் லட்சுமி மற்றும் மஞ்சுளா ஆகிய இருவரையும் பார்ப்பார். அப்போதுதான் லட்சுமி தன் உடன் பிறந்த தங்கை என்பதையும் புரிந்து கொள்வார்,. லட்சுமியின் தோழியான மஞ்சுளாவை அவர் காதலிப்பார்.
இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு திடீரென நம்பியாரால் ஒரு பிரச்சனை வரும். அதே நேரத்தில் மனோகர், கடத்தல் கும்பல் தலைவன் என்பதும் எம்ஜிஆருக்கு தெரியவரும். இந்த நிலையில் தான் எம்ஜிஆரின் சகோதரி லட்சுமி சிவக்குமாரை காதலிப்பார். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பும் எம்ஜிஆருக்கு வரும்
லட்சுமி - சிவக்குமார் திருமணம், நம்பியாரிடமிருந்து மஞ்சுளாவை காப்பாற்றுவது, தன் தந்தையிடம் உங்கள் வாயாலே என்னை உங்கள் மகன் என்று சொல்ல வைக்கிறேன் என்று சவால் விடுவது, மனோகரின் கொள்ளைக்கூட்டத்தை அடக்குவது என, இவை அனைத்தையும் எப்படி எம்ஜிஆர் நிறைவேற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
இந்த படத்தின் ஆரம்ப காட்சிகள் காஷ்மீரில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதும், குறிப்பாக எம்ஜிஆரின் அறிமுக பாடலான காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர் என்ற பாடல் மிகச் சிறந்த அளவில் படமாக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் அப்போதெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், காஷ்மீரின் கொள்ளை அழகை, இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் அருமையாக சண்முகம் என்பவர் படமாக்கி இருப்பார் என்பதும் அந்த காட்சியை பார்க்கும்போது தியேட்டரில் அவ்வளவு அழகாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எம்ஜிஆர், மஞ்சுளா, ஆகிய இருவரும் இந்த அழகு என்பதால் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அந்த காட்சிகள் அமைந்தது.
இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும், பொன்னந்தி மாலைப்பொழுது என்ற பாடலை மட்டும் புலமைப்பித்தன் எழுத, மற்ற பாடல்களை வாலி எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்களில் ஆங்காங்கே எம்ஜிஆர் தனது அரசியல் வசனங்களையும் புகுத்தி இருப்பார். இந்த படத்தின் பாடல்களில் ஒன்றில், ‘நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்பார். அவருக்கு ‘சத்தியம் தான் நான் படித்த புத்தகம், சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவம், அண்ணாவின் பெயர் சொல்லும் காஞ்சியைப் போல், நேருவின் புகழ் சொல்லும் பூமி இது என்று பாடியிருப்பார். அண்ணாவையும் நேருவையும் அவர் இந்த பாடலில் கொண்டு சாமர்த்தியமாக கொண்டு வந்திருப்பார் என்பதும் ஆங்காங்கே சில காட்சிகளில் அரசியல் பேசி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் வெளியான முதல் படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அதிமுகவுக்கு அது பெரிய ஊக்கமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்கியிருப்பார்கள்.