பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தில், நதியா நடிக்க மறுத்ததை அடுத்து, அந்த படத்தில் ரேவதி நடித்ததால் அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்ததாக கூறப்படுகிறது. மணிரத்னம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காலத்தில், பகல் நிலவு, இதயகோயில் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அவரை ஒரு இயக்குனர் என ரசிகர்கள் மற்றும் திரையுலகம் அங்கீகரித்தது மௌனராகம் படத்தில் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், மோகன் மற்றும் கார்த்திக் நாயகன்கள் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் நாயகி யார் என முடிவு செய்யாமல் எப்படி படப்பிடிப்பு செல்வது என்று படக்குழுவினர் குழம்பிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நதியா, மணிரத்னம் மனதில் ஞாபகம் வந்தார். உடனே அவரை தொடர்பு கொண்டு அவரிடம் பேசியபோது, கதை சூப்பராக இருக்கிறது, ஆனால் என்னிடம் டேட் இல்லை, ஒரு ஆறு மாதங்கள் பொறுத்தால், கண்டிப்பாக உங்கள் படத்தின் நடித்துதருகிறேன் என்று கூறினார். ஆனால் தன்னால் காத்திருக்க முடியாது என்று கூறிய மணிரத்னம், அதன் பிறகு ரேவதியை நடிக்க வைத்தார்.
இந்த படம் கடந்த 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ரசிகர்கள் மனதில் இருக்கிறது என்றால், அதற்கு காரணம் மணிரத்னம் அவர்களின் அபாரமான இயக்கம், இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசை, மற்றும் மோகன், கார்த்திக், ரேவதியின் நடிப்பு என்பது தான் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இடம் பெற்ற ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த நிலாவே வா, பனிவிழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு, சின்ன சின்ன வண்ணக்குயில் ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான இந்த படம், பல திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது என்பதும், இந்த படத்தின் தயாரிப்பாளர் மணிரத்னம் சகோதரர் ஜி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பார்த்தால் கூட இந்த படம் புதிய படத்தை பார்ப்பது போல் அவ்வளவு அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை என்னவெனில், கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் காதலிப்பார்கள். கார்த்திக் சின்ன சின்ன திருட்டுக்கள் செய்து வரும் நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்ய வருவார்கள். அப்போது தனக்கு மறுநாள் திருமணம் என்றும், இந்த ஒரு நாள் மட்டும் தன்னை விட்டு விடு என்றும் காவல்துறை அதிகாரியிடம் கெஞ்சுவார். ஆனால் காவல்துறை அதிகாரி மறுத்துவிடுவார்.
இந்த நிலையில் அவர் தப்பித்து செல்லும் போது தான், எதிர்பாராத விதமாக இறந்து விடுவார். காதலன் இறந்து விட்டதால், இனி திருமணமே வேண்டாம் என்று இருந்த ரேவதியை, அவருடைய பெற்றோர் கட்டாயப்படுத்தி மோகனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். மோகனுடன் அவரால் வாழ முடியாத நிலையில் ஒரு கட்டத்தில் விவாகரத்து கேட்பார். இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரேவதியின் மனது எப்படி மாறியது? என்பதை தான் மணிரத்னம் தனது அழகான திரைக்கதை மூலம் சொல்லி இருப்பார்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் இன்றுவரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் நினைத்தால் கூட, மௌன ராகம் போன்ற ஒரு படத்தை, இப்போது கூட எடுக்க முடியாது என்றும், அந்த அளவுக்கு காலத்தால் அழியாத காவிய திரைப்படம் என்றும் மெளனராகம் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.