உலகநாயகன் கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 64 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவருடைய முதல் படமான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படமே, சீன படத்தின் காப்பி என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் அறிமுகமானார். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருந்தார் என்பதும் பிரபல எழுத்தாளர் ஜாவா சீதாராமன் திரைக்கதை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சீனாவில் வெளியான நோபடிஸ் சைல்ட் என்ற படத்தின் காப்பி என்று கூறப்பட்டது. சீனாவில் போர் நடந்த போது பெற்றோரை தொலைத்துவிட்ட 11 வயது சிறுமி தனது பெற்றோரை கண்டுபிடித்து அவர்களுடன் சேர்வது தான் நோபடிஸ் சைல்ட் என்ற படத்தின் கதையாக இருந்தது. இந்த படத்தின் கதை கருவை மையமாக வைத்து தான் கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் குழந்தை மட்டும் தனியாக அனாதை இல்லத்தில் வாழ்ந்த நிலையில் அந்த குழந்தை எப்படி பெற்றோருடன் சேர்ந்தது என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும்.
கமல்ஹாசன் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பதும், குறிப்பாக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலின்போது உருக வைக்கும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே அவர் தான் மிகப்பெரிய ஒரு ஸ்டாராக பின்னாளில் வருவார் என்பதை நிரூபித்தார் என்பதும், அவருடைய நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நோபடிஸ் சைல்ட் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜோஸ்பின் சியாவ் என்பவர் இன்றும் சீனாவில் பெரிய நடிகையாக இருந்து வரும் நிலையில், கமல்ஹாசனும் இன்றும் நம்மூரில் பெரிய நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதை என்னவெனில் ஜெமினிகணேசன் ஒரு ஜமீன்தாரின் மகனாக இருப்பார். ஒருமுறை ரயிலில் செல்லும் போது, அவர் கண்ணம்மா என்ற ஏழைப் பெண்ணை பார்த்து காதலிப்பார். இருப்பினும் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று முடிவு செய்து, ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்துவார்கள். அப்போது கண்ணம்மா கர்ப்பமான நிலையில் தான், திடீரென ஜெமினி கணேசன் வெளிநாடு செல்லவேண்டிய நிலை ஏற்படும்
ஜெமினிகணேசன் வெளிநாடு சென்ற பின்னர் கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கும். கண்ணம்மாவின் தந்தை அவர் மகளின் நிலையை நினைத்து வருந்தி அந்த குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்து விடுவார். இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பின்னரும், சந்தேகம் காரணமாக கண்ணம்மாவை ஜெமினி கணேசன் பார்க்காமல் இருப்பார். அதன் பிறகு என்ன நடந்தது? கணவன் மனைவி சேர்ந்தார்களா? குழந்தை பெற்றோருடன் சேர்ந்ததா? என்பது தான் இந்த படத்தின் கதையாக இருந்தது.
ஜமீன்தாராக டிஎஸ் பாலையா, ஜமீன்தார் மகனாக ஜெமினி கணேசன், கண்ணம்மாவாக சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியானது என்பதும், சுதர்சனம் இசையில் உருவான அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, ஆடாத மனமும், கண்களின் வார்த்தைகள் போன்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமலஹாசனின் முதல் படமே சீன படத்தின் காப்பி என்ற விமர்சனம் இருந்தாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது மிகப்பெரிய வசூலையும் எட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது