உலகநாயகன் கமல்ஹாசன் தனது 22 வயதிலேயே உணர்ச்சிகள் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும், இந்த படத்தின் கதைப்படி விதவையுடன் உறவு, விபச்சாரியுடன் பழக்கம் போன்ற காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் இயக்குனர் ஆர்சி சக்தி. சிறுவயது முதலே இருவரும் பல இடங்களில் சுற்றுவார்கள் என்பதும் கமல்ஹாசனின் எல்டாம்ஸ் சாலை, வீட்டின் மொட்டை மாடியில் இருவரும் மணிக்கணக்கில் சினிமா குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பல கதைகள், திரைக்கதைகள் உருவாக்குவார்கள் என்பதும், அப்படி உருவான ஒரு கதை தான் உணர்ச்சிகள் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஆர்சி சக்தி இயக்க, கமல்ஹாசன் திரைக்கதை வசனத்தில் உதவி செய்ததோடு, உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். இந்த படத்தின் கதைப்படி 18 வயது கமல்ஹாசன் ஒரு வீட்டில் வேலை பார்ப்பார். அந்த வீட்டில் ஒரு விதவை இருப்பார். அந்த விதவை தன் உடல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக கமல்ஹாசனை பயன்படுத்தி கொள்வார். அவருடைய மிரட்டலுக்கு அஞ்சி கமல்ஹாசனும் உறவுக்கு சம்மதிப்பார்.
ஆனால் அந்த விதவையின் சகோதரர் இந்த உறவை தெரிந்து, கமல்ஹாசனை அடித்து துரத்தி விடுவார். அதன்பின் கமல்ஹாசன், சென்னை செல்லும் நிலையில், அங்கும் அவருக்கு பாலியல் ரீதியாக துன்பங்கள் பல ஏற்படும். அதன் பிறகு தான் மரகதம் என்ற விபச்சாரியை அவர் சந்திப்பார்.
அவர் கமல்ஹாசனை ஆதரித்து, நட்புடன் பழகிய நிலையில் தான், திடீரென கமல்ஹாசனுக்கு பாலியல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படும். அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சையின் பலனின்றி இறந்து விடுவதாக கதை முடிந்திருக்கும்.
ஒரு 18 வயது இளைஞன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், தவறான பெண்களால் பயன்படுத்தப்பட்டு, வாழ்க்கையை எப்படி தொலைத்து கொள்கிறான் என்பது தான் இந்த படத்தில் ஆர்சி சக்தி சொல்ல வந்த கதையாக இருக்கும். இந்த படத்தில் கமலஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பதும், இந்த படத்தில் அவருக்கு இணையாக காஞ்சனா, ஸ்ரீவித்யா, மேஜர்சுந்தர்ராஜன், லலிதாஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக லலிதாஸ்ரீ, விபச்சாரி வேடத்தில் மிக அருமையாக நடித்திருப்பார்.
இந்த படத்துக்கு ஷ்யாம் என்பவர் இசையமைத்திருப்பார். கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்த படம் வெளியாகி, ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த படம் ராசலீலா என்ற பெயரில் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு சூப்பர்ஹிட் ஆகியது.
இந்த படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும், ரசிகர்கள் சிலர் இந்த படத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் படம் என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தனர். இருந்தாலும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இந்த படத்தால் நல்ல லாபம் கிடைத்ததாக கூறப்பட்டது.